எங்களை பற்றி

ஆற்றல் ஃபவுண்டேஷன் ஒரு இலாப நோக்கமற்ற தன்னார்வ அமைப்பாகும்.

ஆற்றல் ஃபவுண்டேஷன் தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் பள்ளிகளின் குழுமத்தலைவர் திரு. ஆற்றல் அசோக் அவர்களால் நிறுவப்பட்டது.  திரு. ஆற்றல் அசோக் அவர்கள் இம்மண்ணின் மைந்தர். அவர், ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலூக்காவைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் திரு. ஆறுமுகம் மற்றும் திருமதி. Dr K.S. சௌந்தரம் Ex MP இருவரும் கல்லூரி பேராசிரியர்களாக பணி ஆற்றியவர்கள்.

திரு. ஆற்றல் அசோக் அவர்கள் பள்ளிக் கல்வியினை இந்தியாவிலும், இளங்கலை மற்றும் முதுகலைக் கல்வியினை அமெரிக்காவிலும் பயின்றுள்ளார். அவர், கடந்த 15 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட பள்ளிகள் ( TIPS – The Indian Public School ) மற்றும் கல்லூரிகளை நமது நாட்டிலும், வெளிநாட்டிலும் நிறுவி நிர்வகித்து வருகிறார். ஃபோர்ப்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, சி.இ.ஜி.ஆர் மற்றும் பிற பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து கல்வி மற்றும் வணிகத் துறையில் சிறப்பான செயல்பாடு மற்றும் மேலாண்மைக்காக பல கௌரவ விருதுகளைப் பெற்றுள்ளார்.

எமது நம்பிக்கை

ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியானது அதில் அடங்கியுள்ள உறுப்பினர்களை சார்ந்து மட்டுமின்றி, நம் ஒவ்வொருவருக்கும் அவ்வளர்ச்சியில் சமபங்கு உள்ளது.

தமிழ்